Coimbatore Book Foundation conducted its Annual Book Fair at CODISSIA Halls in July 2023. Here is a review of it by the students of Development Communication Course from the Department of Communication, PSG College of Arts & Science, Coimbatore.
Coimbatore Book Foundation conducted its Annual Book Fair at CODISSIA Halls in July 2023. Here is a review of it by the students of Development Communication Course from the Department of Communication, PSG College of Arts & Science, Coimbatore.
It was an amazing experience. I have gone through various genres of books. There is a offer
prize for old books, it is very helpful for to us buy the books.
ஜீலை மாதத்தில் கொடிசியாவில் நடைபெற்ற புத்தக திருவிழாவிற்கு சென்றிருந்தேன்.250 க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் புத்தக அரங்குகளை அமைத்திருந்தனர்.நிறைய மக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தக திருவிழா நடந்த பத்து நாட்களுமே கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர் -வாசகர் சந்திப்பு போன்றவை நடந்தது.புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் “என்றும் இனிக்கும் சங்க இலக்கியம் ” என்ற தலைப்பில் பேசினார்.எனக்கு பிடித்தமான இருபது புத்தகங்களை நான் வாங்கி வந்தேன்.புத்தகம் இல்லாத அறை என்பது உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது.எனவே வாசிப்பை நேசிப்போம்!
ஜூலை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோவை கொடிசியா வணிக வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெற்றது.முந்நூற்றிற்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.சிறைகைதிகளுக்கான புத்தக சேகரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . எழுத்தாளர்கள் பலர் புத்தக திருவிழாவிற்கு வருகை தந்து கலந்துரையாடினர். எனக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி வந்தேன்.தொடர் வாசிப்பு மனிதனை பண்படுத்தும்.வாசியுங்கள்.
In the book fair of 2023 held at CODISSIA Trade Fair Complex.They are different Books in diverse regional languages consisting of Tamil, Malayalam, Telugu, Hindi and English. The finals of various activities which includes elocution, essay and verse writing contests,etc…,The cost of books are comparability low from other places. Separate stalls for medicine, health, and spirituality and for children were made available. More than 200 publication houses participated in the fair,”I bought 2 novels and 1 foreign author book related to core subject.
It was outstanding experience to participate in this exhibition everything was good.keep it up.we got many leads from exhibition now its our turn that whether it will transform in result or not.
கோவை புத்தகக் கண்காட்சி ஜூலை 21 தொடங்கி ஜூலை 30 வரை பத்து நாட்கள் தொடர்ந்து, நமது கொடீசியா வணிக வளாகத்தில் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதில் பங்கேற்றனர். அது வெறும் புத்தகக் கண்காட்சியாக மட்டுமல்லாமல், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழா, நாடகம் , சிறந்த ஆளுமைகளின் சொற்பொழிவு , போட்டிகள் என பலவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. ஜூலை 23 நிகர் கலைக்கூடத்தின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகரோடு சேர்ந்து நானும் பங்கேற்றேன். 15 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கினேன்.பல எழுத்தாளர்கள், புதிய புதிய புத்தகங்கள், பற்றிய அறிமுகமும் எனக்குக் கிடைத்தது. பல வாசகர்களை அங்கு கண்டதில் பெருமகிழ்ச்சி. “வாசித்தல் இனிது!”.
கோவை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா ஜுலை 21ம்தேதி தொடங்கி 31வரை நடைப்பெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் உரைகள், பறை, வள்ளிக்கும்மி, கரகம், இசைக் கச்சேரி போன்றவை நடைப்பெற்றது. இந்நிகழ்வில், சிறை மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறை சார்பாக கோவை சிறைவாசிகளுக்கு புத்தகம் நன்கொடை பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதுப்போக, சூழலியல் தொடர்பான உரையாடல்களும், குட்டி ஆகாயம் புத்தக அங்காடி சார்பாக, குழந்தைகளைக்கான கதைச் சொல்லும் போட்டியும் நடைப்பெற்றது.
இப்புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய நூல்கள் :
• வேல ராமமூர்த்தி சிறுகதைகள்
• அடிமைப்படுத்தும் குலதெய்வம்
• இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடல்களும் – பாப்லோ நெரூடா
• இறுதிப் பேருரைகள்
• திணையியல் கோட்பாடு – பாமயன்
• நாட்டார் வழக்காற்றியல் அரசியல், உப்பிட்டவரை – ஆ. சிவசுப்பிரமணியன்
• அடையாள மீட்பு – கூகி வா தியாங்கோ
• பறையன் பாட்டு
• அடையாள உருவாக்கமும், அடையாள வேறுபாடுகளும்
• போர் ஒரு சூழலியல் வன்முறை – கார்முகில்
• மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
The book exhibition that was conducted at CODISSIA was very useful. The book shops were located in hall A,B,C.The cost of the books were affordable. Many book collection were there like novel, fiction,poem, subject related books, government exams related books,historical books,kids books,etc. Many book offers were provided by the book publishers to encourage the book readers.
Book expo was very useful, presentable to viewers.All type of generes were available. All affordable to buy.I got nice exposure and it is very useful to all.